கஹதுடுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொட்டாவை – தலகல வீதியில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்துள்ளார்.
தியகமவிலிருந்து கொட்டாவை நோக்கிப் பயணித்த கார் ஒன்று வீதியில் பயணித்த பாதசாரி மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது படுகாயமடைந்த பாதசாரி ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்த 74 வயதுடைய நபராவார்.
இதனையடுத்து காரின் சாரதி சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கஹதுடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.