ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் பிரச்சினைக்குத் தீர்வு எட்டப்பட்டுள்ளது எனவும், அது தொடர்பான பெயர் விபரங்களைக் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ விரைவில் வெளியிடுவார் எனவும் அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்திக்குக் கிடைக்கப் பெற்ற ஐந்து தேசியப் பட்டியல் ஆசனங்களில் நான்கு ஆசனங்களுக்குரிய உறுப்பினர்களின் பெயர்கள் இன்னும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பிவைக்கப்படவில்லை.
தேசியப் பட்டியல் வாய்ப்பைத் தோல்வி அடைந்த உறுப்பினர்களும், பங்காளிக் கட்சி உறுப்பினர்களும் ஒன்று சேருவதால் ஐக்கிய மக்கள் கூட்டணிக்குள் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு எட்டப்பட்டுவிட்டதா என எழுப்பப்பட்ட கேள்விக்கே, “பிரச்சினை தீர்ந்துவிட்டது, பெயர் விபரத்தை மட்டுமே அறிவிக்க வேண்டியுள்ளது. அதனைக் கட்சித் தலைவர் அறிவிப்பார் என்றும் அஜித் பி பெரேரா குறிப்பிட்டார்.
அதேவேளை, உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்குச் சாதகமான பெறுபேறு கிட்டும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.