நாட்டில், முட்டை விலை மிகவும் குறைந்த நத்தார் பண்டிகை இதுவென தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் துசாரி ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் பொதுமக்கள் இணைப்புக் காரியாலயம் நேற்றைய தினம் நாவலப்பிட்டியில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது நிகழ்வில் பங்கேற்ற போதே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
இந்த அலுவலகத்தில், ஒவ்வொரு மாதத்திலும் இரண்டாம் மற்றும் நான்காம் வெள்ளிக்கிழமைகளில் பொதுமக்களின் பிரச்சினைகள் குறித்த தகவல்கள் திரட்டப்படும்.
குரங்குகளினால் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.