![](https://tamilrelaksnews24.com/wp-content/uploads/2025/01/pongal-movies-1.jpg)
நடிகர் அஜித் ரசிகர்கள் எல்லோரும் பொங்கலுக்கு விடாமுயற்சி படத்தை பார்க்க ஆர்வத்துடன் காத்திருந்தனர். ஆனால் அது தள்ளிப்போனதாக நேற்று தயாரிப்பாளர் அறிவித்தது அவர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது.
பெரிய படமான விடாமுயற்சி விலகியதால் தற்போது பொங்கல் ரேஸில் பல புதிய சின்ன பட்ஜெட் படங்கள் நுழைந்து இருக்கின்றன.
வரும் பொங்கலுக்கு மட்டும் தமிழில் சுமார் 10 படங்கள் ரிலீஸ் ஆக இருக்கின்றன. அருண் விஜய்யின் வணங்கான் தொடங்கி மிர்ச்சி சிவாவின் சுமோ வரையான படங்கள் வெளியாகவுள்ளன.
இந்நிலையில், வணங்கான், காதலிக்க நேரமில்லை, கேம் சேஞ்சர், படை தலைவன், 10 ஹவர்ஸ், மோ, மெட்ராஸ்காரன், தருணம், 2கே லவ் ஸ்டோரி, சுமோ ஆகிய படங்கள் பொங்கலுக்கு வெளியாகவுள்ளன.