கடற்படைப் பயிற்சியான “SLINEX 24” இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பினரை கொண்டு 2024 டிசம்பர் 17 முதல் டிசம்பர் 20 வரை விசாகப்பட்டினத்தின் கிழக்கு கடற்படை கட்டளையின் கீழ் நடத்தப்பட்டதாக இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பயிற்சி இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
துறைமுக கட்டம் டிசம்பர் 17 முதல் டிசம்பர் 18 வரை நடைபெற்றது, கடல் கட்டம் டிசம்பர் 19 முதல் டிசம்பர் 20 வரை நடைபெற்றது.
இந்திய கிழக்கு கடற்படையின் ஐஎன்எஸ் சுமித்ரா, இந்தியத் தரப்பில் பயிற்சியில் பங்கேற்றது. அதே நேரத்தில், கடல் ரோந்துக் கப்பலான SLNS சயுரா, இலங்கையின் சார்பில் பங்கேற்றது.
இந்த பயிற்சியின்போது, துப்பாக்கிச் சூடுகள், தகவல் தொடர்பு நடைமுறைகள், கடல்சார் மற்றும் வழிசெலுத்தல் பரிணாமங்கள் மற்றும் உலங்கு வானூர்தி செயல்பாடுகள் என்பன உள்ளடங்கியிருந்தன. இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இந்த பயிற்சிகள் 2005 இல் ஆரம்பிக்கப்பட்டன.