தனியார் கல்வி நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பாக குறித்து எடுக்கப்பட்ட தீர்மானம்!

தனியார் கல்வி நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பாக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் கலந்துரையாடல் ஒன்று நேற்று யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

தனியார் கல்வி நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பாக அவர் கூறியுள்ளார்,

கலந்துரையாடலில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர், ஏற்கனவே எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமையவும், மாவட்டச் செயலகத்தில் கடந்த 11ஆம் திகதி நடைபெற்ற மாவட்ட சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமையவும், தரம் 9 மற்றும் அதற்கு உட்பட்ட வகுப்புக்களுக்கான தனியார் கல்வி நிலைய செயற்பாடுகளை வெள்ளிக்கிழமைகளில் பிற்பகல் வேளைகளிலும் ஞாயிற்றுக்கிழமை முழு நேரமாகவும் நிறுத்துவது தொடர்பாகவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானமானது மாவட்டத்தின் சமூக நலனை அடிப்படையாகக் கொண்டே எடுக்கப்பட்டதாகவும். பிள்ளைகளின் நலன்கருதி தனியார் கல்வி நிறுவனங்களின் அமைவிடங்கள், வகுப்பறைக் கட்டமைப்பு மற்றும் வசதிகள் தொடர்பிலும் நிறுவன உரிமையாளர்கள் கூடுதலான கவனம் செலுத்துமாறும் அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேற்படி கலந்துரையாலில் பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

தரம் 9 மற்றும் தரம் 9 இற்கு உட்பட்ட வகுப்புக்களுக்கான தனியார் கல்வி செயற்பாடுகள் மற்றும் குழு வகுப்புக்களை வெள்ளிக்கிழமைகளில் பிற்பகல் வேளைகளிலும் ஞாயிற்றுக்கிழமை முழு நேரமாகவும் நிறுத்துவது எனவும். பிரதேச செயலாளர்கள் தமது உத்தியோகத்தர்கள் ஊடாக மேற்படி விடயத்தினை கண்காணித்து அறிக்கையிடுதல் வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

தனியார் கல்வி நிலைய வாசலில் பெற்றோர்கள் காத்திருப்பதனால் பாரிய போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதாக முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் கல்வி நிலைய உரிமையாளர்கள், நிர்வாகிகள் இதற்கான சரியான பொறிமுறையினை மேற்கொண்டு போக்குவரத்து நெருசலை கட்டுப்படுத்த வேண்டும் எனவும், இந்த பொறிமுறையினை தாமாக நடைமுறைப்படுத்த தவறும் தனியார் கல்வி நிறுவனங்கள் தொடர்பில் பொலிஸாரின் உதவி பெற்றுக்கொள்ளப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

பிரதேச செயலாளர்கள் 2025ஆம் ஆண்டு ஜனவரி மாத இறுதிக்குள் தமது பிரதேசங்களில் இயங்கும் தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் குழு வகுப்புக்களை தொடர்பில் அனைவருடனும் கலந்துரையாடல் மேற்கொள்ள வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில் பிரதேச செயலாளர்கள், உதவி மாவட்ட செயலாளர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், யாழ். மாவட்ட தனியார் கல்வி நிலைய உரிமையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related News

77ஆவது சுதந்திர தின நிகழ்வில் பொது மக்கள் பங்கேற்க முடியும்!

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி நடைபெறவுள்ள நாட்டின் 77ஆவது சுதந்திர தின நிகழ்வில் பொது மக்கள் பங்கேற்க முடியும் பொது நிர்வாக அமைச்சர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன தெரிவித்துள்ளார். மேலும், சுதந்திர தின நிகழ்வுகளுக்காக 80 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டள்ளது.…

Read More
வாகன இறக்குமதிக்கான அனுமதி இன்று முதல் வழங்கப்பட்டுள்ளது.

வாகன இறக்குமதிக்கான அனுமதி இன்று(28.01) முதல் வழங்கப்பட்டுள்ளது. நிதியமைச்சராக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இதற்கான விசேட வர்த்தமானி அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார்.   இந்த அறிவிப்பின் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த வாகன இறக்குமதியை மீள ஆரம்பிக்கலாம். பெப்ரவரி மாதம் முதல் இறக்குமதி அனுமதி…

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

77ஆவது சுதந்திர தின நிகழ்வில் பொது மக்கள் பங்கேற்க முடியும்!

77ஆவது சுதந்திர தின நிகழ்வில் பொது மக்கள் பங்கேற்க முடியும்!

‘ ஜன நாயகன்’

‘ ஜன நாயகன்’

அறிமுக விருதுகள்!

அறிமுக விருதுகள்!

வாகன இறக்குமதிக்கான அனுமதி இன்று முதல் வழங்கப்பட்டுள்ளது.

வாகன இறக்குமதிக்கான அனுமதி இன்று முதல் வழங்கப்பட்டுள்ளது.

அரசுக்கு சொந்தமான சொகுசு வாகனங்கள் கண்டுபிடிப்பு!

அரசுக்கு சொந்தமான சொகுசு வாகனங்கள் கண்டுபிடிப்பு!

மருந்துகளின் விலையைக் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது!

மருந்துகளின் விலையைக் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது!