11வயதில் தபேலாவுடன் அறிமுகம்: 73வயதில் உலகை விட்டு பிரிந்த ஷாகிர் ஹுசேன்!

இந்தியாவின் புகழ்பெற்ற தபேலா இசை வித்துவான் உஸ்தாத் ஷாகிர் ஹுசேன் தனது 73ஆவது வயதில் காலமானார்.

இதய பாதிப்பு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த ஷாகிர் ஹுசேன், சிகிச்சை பலனின்றி காலமானார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய நாட்டின் தலைசிறந்த தபேலா இசைக் கலைஞர்களில் ஒருவரான உஸ்தாத் ஷாகிர் ஹுசேன், 1951ம் ஆண்டு மார்ச் 9ம் திகதி மும்பையில் பிறந்தார்.

அவரது தந்தை உஸ்தாத் அல்லா ரக்கா குரேஷியும் ஒரு சிறந்த தபேலா கலைஞர் ஆவார்.

சிறு வயதில் இருந்தே தபேலா வாசிப்பதில் சிறந்து விளங்கிய ஷாகிர் ஹுசேன், 11 வயதில் அமெரிக்காவில் தனது முதல் கச்சேரியை வெற்றிகரமாக நடத்தினார்.

தந்தையுடன் அவர் அந்த இசைக் கச்சேரியை நடத்தி இருந்தார். அதில் தனக்குச் சம்பளமாக ஐந்து ரூபாய் வழங்கப்பட்டதாகப் பின்னர் ஒரு நேர்காணில் நினைவு கூர்ந்திருந்தார்.

வாழ்க்கையில் தாம் பெற்ற அந்த ஐந்து ரூபாய்தான் மிக மதிப்புமிக்க சம்பாத்தியம் என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.

எந்தவொரு பொருளாக இருந்தாலும் அதில் இருந்து இசையை உருவாக்கும் வல்லமை கொண்டவர் ஷாகிர் ஹுசேன். வீட்டின் சமையல் அறையில் உள்ள சாதாரண பொருட்களில் இருந்தும் கூட இசையைக் கொண்டு வருவதில் கை தேர்ந்தவராவார்.

ஷாகிர் ஹுசேன் இசைத் துறையில் செய்த சாதனைகளுக்காக அவருக்கு 1988ம் ஆண்டு பத்மஸ்ரீ, 2002இல் பத்ம பூஷன் மற்றும் 2023இல் பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது. மேலும், இவர் ஐந்து கிராமி விருதுகளை பெற்றுள்ளார்.

Related News

‘ ஜன நாயகன்’

தமிழகத்தில் மக்களின் நன்மதிப்பை பெறுவதற்காக அரசியலில் களமிறங்கி இருக்கும் முன்னணி நட்சத்திர நடிகரான விஜய் நடிப்பில் தயாராகி வரும் ‘விஜய் 69 ‘எனும் திரைப்படத்திற்கு ‘ ஜன நாயகன்’ என பெயரிடப்பட்டு, அதற்கான இரண்டு போஸ்டர்கள் வெளியிடப்பட்டிருக்கிறது. முன்னணி நட்சத்திர இயக்குநரான…

Read More
நடிகர் கவினை இயக்கும் நடன இயக்குனர்!

நடிகர் கவின் நடிப்பில் வெளியான ‘பிளடி பெக்கர்ஸ் ‘எனும் திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றதால் நட்சத்திர அந்தஸ்திற்காக மீண்டும் கடுமையாக உழைத்து வரும் நடிகர் கவின் கதையின் நாயகனாக நடித்திருக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக அப்படக் குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.…

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

77ஆவது சுதந்திர தின நிகழ்வில் பொது மக்கள் பங்கேற்க முடியும்!

77ஆவது சுதந்திர தின நிகழ்வில் பொது மக்கள் பங்கேற்க முடியும்!

‘ ஜன நாயகன்’

‘ ஜன நாயகன்’

அறிமுக விருதுகள்!

அறிமுக விருதுகள்!

வாகன இறக்குமதிக்கான அனுமதி இன்று முதல் வழங்கப்பட்டுள்ளது.

வாகன இறக்குமதிக்கான அனுமதி இன்று முதல் வழங்கப்பட்டுள்ளது.

அரசுக்கு சொந்தமான சொகுசு வாகனங்கள் கண்டுபிடிப்பு!

அரசுக்கு சொந்தமான சொகுசு வாகனங்கள் கண்டுபிடிப்பு!

மருந்துகளின் விலையைக் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது!

மருந்துகளின் விலையைக் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது!