யாழில் 213 கிலோ எடையுடைய கேரளக் கஞ்சாவுடன் மீசாலை பகுதியைச் சேர்ந்தவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
51 ஆவது படைப்பிரிவை சேர்ந்த புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைவாக, காரைநகர் பகுதியில் வைத்து சாவகச்சேரி – மீசாலை பகுதியைச் சேர்ந்த இரண்டு சந்தேகநபர்கள் பெருமளவான கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று புதன்கிழமை அதிகாலை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது 213 கிலோ 800 கிராம் எடையுடைய கேரள கஞ்சா மற்றும் ஒரு படகு என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் சான்றுப் பொருட்களுடன் ஊர்காவல்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.