
சுந்தர் சி இயக்கத்தில் உருவான ‘மத கஜ ராஜா’ திரைப்படம் எதிர் வரும் 12 ம் திகதி பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2013 ம் ஆண்டு உருவாக்கபட்ட இத் திரைப்படம் ஒரு சில காரணங்களால் திரைக்கு வரவில்லை.
இப் படத்தில் விஷால், சந்தானம் , வரலக்ஷ்மி, சதீஷ், நிதின் சத்யா, சோனுசூட், அஞ்சலி மற்றும் மறைந்த நடிகர்களாகிய மணிவண்ணன், மனோபாலா, மயில்சாமி என பலரும் நடித்துள்ளனர்.
விஜய் அண்டனி இப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் 12 வருடங்களுக்கு பின் இப் படம் வெளியாக இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.