யாழில் பரவி வரும் காய்ச்சலால் மேலும் ஒருவர் உயிரிழப்பு!

கடந்த சில நாட்களாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பரவி வரும் மர்மக் காய்ச்சல் காரணமாக, நேற்றும் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் நாளுக்கு நாள் நிலைமை ஆபத்தாக மாறி வருகின்றது எனவும் சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஐந்து நாட்களாக காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த, யாழ் பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லூரி வீதி, ஓடக்கரையைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயாகிய சுரேஷ்குமார் ரஞ்சிதா (வயது 33) என்பவரே உயிரிழந்துள்ளார்.

கடந்த 6ஆம் திகதி வெள்ளிக்கிழமை காய்ச்சல் அறிகுறி தென்பட்டதைத் தொடர்ந்து அவர் மாத்திரைகளை உட்கொண்டு வந்துள்ளார்.

காய்ச்சல் தொடர்ந்ததை அடுத்து நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அவர் சென்றுள்ளார்.

இதன்போது அவர் அங்கு மயங்கி நிலையில் உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று முற்பகல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் அவரின் மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளன மேற்படி பெண்ணின் சுவாசத் தொகுதியில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அவருக்கு உண்ணிக் காய்ச்சல் அல்லது எலிக் காய்ச்சல் ஏற்பட்டிருக்கலாம் என்று தெரியவருகின்றது.

எனினும், கொழும்பில் இருந்து பரிசோதனை அறிக்கைகள் கிடைத்த பின்னரே உறுதிப்படுத்த முடியும் என்று சுகாதாரத்துறையினர் கூறியுள்ளனர்.

இதேவேளை, திடீர் காய்ச்சல் மற்றும் சடுதியான நோய் நிலை காரணமாக 23 வயதான யுவதி ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளார்.

அண்மையில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் காரணமாக எலிக் காய்ச்சல் பரவக்கூடிய சாத்தியங்கள் காணப்படுகின்றன.

எனவே, பொதுமக்கள் தமது சுகாதாரம், குடிதண்ணீர் ஆரோக்கியம் என்பவற்றில் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

Related News

களுத்துறையில் வீடொன்றில் தீ விபத்து!

வாதுவை, பொத்துபிட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். களுத்துறை மாநகர சபையின் தீயணைப்புப் படையினர் மற்றும் பிரதேசவாசிகள் சிலர் இணைந்து தீ பரவலை கட்டுப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் விபத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில் அந்த…

Read More
மின்சாரத்தை 4 முதல் 5 மணி நேரம் வரை துண்டிக்க நேரிடும் அபாயம்!

நாட்டில், அரசாங்கம் மாறினாலும் மின்சார சபைக்குள் மின்சார மாபியா செயற்படுவதாக இலங்கை மின்சார சபை தொழில்நுட்ப பொறியியலாளர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கத்தின் உப தலைவர் நந்தன உதயகுமார தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், நீர் மின் நிலையங்களுக்கு அருகில் உள்ள நீர்த்தேக்கங்களில்…

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

களுத்துறையில் வீடொன்றில் தீ விபத்து!

களுத்துறையில் வீடொன்றில்  தீ விபத்து!

மின்சாரத்தை 4 முதல் 5 மணி நேரம் வரை துண்டிக்க நேரிடும் அபாயம்!

மின்சாரத்தை 4 முதல் 5 மணி நேரம் வரை துண்டிக்க நேரிடும் அபாயம்!

யாழில் பரவி வரும் காய்ச்சலால் மேலும் ஒருவர் உயிரிழப்பு!

யாழில் பரவி வரும் காய்ச்சலால் மேலும் ஒருவர் உயிரிழப்பு!

சிரியாவில் ஐஎஸ் அமைப்பு தொடர்பாக அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் கருத்து!

சிரியாவில் ஐஎஸ் அமைப்பு தொடர்பாக அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் கருத்து!

நடிகர் துல்கர் சல்மான் வெளியிட்ட சமுத்திரக்கனியின் ‘திரு. மாணிக்கம்’ பட முன்னோட்டம்

நடிகர் துல்கர் சல்மான் வெளியிட்ட சமுத்திரக்கனியின் ‘திரு. மாணிக்கம்’ பட முன்னோட்டம்

ஆசிய சதுரங்க இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ள யாழ் மாணவி!

ஆசிய சதுரங்க இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ள யாழ் மாணவி!