மின் கட்டண குறைப்பு தொடர்பான அமைச்சரவை தீர்மானம்!

மின் கட்டணத்தை 33 சதவீதத்தால் குறைக்க முடியும் என்ற எமது நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,” மின்சாரசபை ஊழியர்களுக்கு எவ்வித விசேட கொடுப்பனவையும் வழங்காமலிருப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மின்கட்டணத்தை 33 சதவீதத்தால் குறைக்க முடியும் என்ற நிலைப்பாட்டில் நாம் உறுதியாகவுள்ளோம்
மேலும்

கடந்த அரசாங்கத்தால் மக்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட பணம் தொடர்பான தரவினை அடிப்படையாகக் கொண்டே நாம் அந்த கருத்தினை முன்வைத்தோம்.

எதிர்வரும் 6 மாதங்களுக்கு மின் கட்டணத்தை அதிகரிக்காமல் இருப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

அதன்பின்னர் மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் வகையில் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்படும்.

கிடைக்கும் முதலாவது சந்தர்ப்பத்திலேயே மின் கட்டணத்தில் திருத்தங்களை மேற்கொண்டு மக்களுக்கு நிவாரணத்தை வழங்குவோம்.

நாம் அரசாங்கத்தைப் பொறுப்பேற்ற போது இலங்கை மின்சாரசபையில் மக்களிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட பணத்தில் பாரிய தொகை செலவிடப்பட்டிருந்தது.

எனவே தற்போது மின் கட்டணத்தை அதிகரிக்காமல் பேணுவதற்கான நடவடிக்கைகளையே மின்சாரசபை முன்னெடுக்க வேண்டியுள்ளது. எதிர்வரும் 6 மாதங்களுக்கு அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும்.” என கூறியுள்ளார்.

Related News

களுத்துறையில் வீடொன்றில் தீ விபத்து!

வாதுவை, பொத்துபிட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். களுத்துறை மாநகர சபையின் தீயணைப்புப் படையினர் மற்றும் பிரதேசவாசிகள் சிலர் இணைந்து தீ பரவலை கட்டுப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் விபத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில் அந்த…

Read More
மின்சாரத்தை 4 முதல் 5 மணி நேரம் வரை துண்டிக்க நேரிடும் அபாயம்!

நாட்டில், அரசாங்கம் மாறினாலும் மின்சார சபைக்குள் மின்சார மாபியா செயற்படுவதாக இலங்கை மின்சார சபை தொழில்நுட்ப பொறியியலாளர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கத்தின் உப தலைவர் நந்தன உதயகுமார தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், நீர் மின் நிலையங்களுக்கு அருகில் உள்ள நீர்த்தேக்கங்களில்…

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

களுத்துறையில் வீடொன்றில் தீ விபத்து!

களுத்துறையில் வீடொன்றில்  தீ விபத்து!

மின்சாரத்தை 4 முதல் 5 மணி நேரம் வரை துண்டிக்க நேரிடும் அபாயம்!

மின்சாரத்தை 4 முதல் 5 மணி நேரம் வரை துண்டிக்க நேரிடும் அபாயம்!

யாழில் பரவி வரும் காய்ச்சலால் மேலும் ஒருவர் உயிரிழப்பு!

யாழில் பரவி வரும் காய்ச்சலால் மேலும் ஒருவர் உயிரிழப்பு!

சிரியாவில் ஐஎஸ் அமைப்பு தொடர்பாக அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் கருத்து!

சிரியாவில் ஐஎஸ் அமைப்பு தொடர்பாக அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் கருத்து!

நடிகர் துல்கர் சல்மான் வெளியிட்ட சமுத்திரக்கனியின் ‘திரு. மாணிக்கம்’ பட முன்னோட்டம்

நடிகர் துல்கர் சல்மான் வெளியிட்ட சமுத்திரக்கனியின் ‘திரு. மாணிக்கம்’ பட முன்னோட்டம்

ஆசிய சதுரங்க இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ள யாழ் மாணவி!

ஆசிய சதுரங்க இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ள யாழ் மாணவி!