தேசியப் பட்டியல் ஆசனங்கள் அறிவிப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கான வெற்றிடமான ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் பெயர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதன்படி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், சுஜீவ சேனசிங்க மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நிஷாம் காரியப்பர் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மொஹமட் ஸ்மைல் மொஹமட் ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்கு 05 தேசியப்பட்டியல் ஆசனங்களைப் பெற்றுக் கொண்டிருந்த நிலையில், அதில் ஒரு ஆசனம் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டாரவுக்கு வழங்கப்பட்டிருந்தது.

இதேவேளை, குறித்த தேசியப் பட்டியல் ஆசனங்களுக்கான பெயர் பட்டியலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நிசாம் காரியப்பரின் பெயர் உள்ளடக்கப்படாமல், அதனை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்புவதற்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்தநிலையில், நிசாம் காரியப்பரின் பெயரை உள்ளடக்கி தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய ஆசனங்களுக்கான பெயர் பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Related News

கொழும்பு பங்குச் சந்தையில் ஏற்பட்ட மாபெரும் மாற்றம்!

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக கொழும்பு பங்குச் சந்தையின் இதற்கமைய இன்றைய(12.12.2024) நாள் முடிவில், அனைத்து பங்கு விலை குறியீடு 116.6.4 புள்ளிகள் அதிகரித்து 14,001.73 புள்ளிகளாக உள்ளது. அத்துடன், S&P தரப்படுத்தல் குறியீடு 42.80 புள்ளிகளால் அதிகரித்து 4,186.80 புள்ளிகளாக…

Read More
வாகனங்களின் சட்டப்பூர்வ தன்மையை உறுதிப்படுத்த இணையத்தள சேவை!

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் சட்டப்பூர்வ தன்மையை உறுதிப்படுத்துவதற்காக இலங்கை சுங்கத்தினரால் இணையத்தள சேவை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, வாகனங்களின் செஸி எண்ணை உள்ளிடுவதன் மூலம் வாகனத்தின் சட்டப்பூர்வ தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை சுங்கத்தின் பேச்சாளரும்…

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

கொழும்பு பங்குச் சந்தையில் ஏற்பட்ட மாபெரும் மாற்றம்!

கொழும்பு பங்குச் சந்தையில் ஏற்பட்ட மாபெரும் மாற்றம்!

வாகனங்களின் சட்டப்பூர்வ தன்மையை உறுதிப்படுத்த இணையத்தள சேவை!

வாகனங்களின் சட்டப்பூர்வ தன்மையை உறுதிப்படுத்த இணையத்தள சேவை!

தேசியப் பட்டியல் ஆசனங்கள் அறிவிப்பு!

தேசியப் பட்டியல் ஆசனங்கள் அறிவிப்பு!

இத்தாலியின் கடற்பரப்பில் கவிழ்ந்த படகு -மூன்று நாட்கள் கடலில் தத்தளித்த 11 வயது சிறுமி மீட்பு!

இத்தாலியின் கடற்பரப்பில் கவிழ்ந்த படகு -மூன்று நாட்கள் கடலில் தத்தளித்த 11 வயது சிறுமி மீட்பு!

உக்ரைனை எச்சரிக்கும் அமெரிக்கா: ரஷ்யாவின் அடுத்த கட்ட நகர்வு!

உக்ரைனை எச்சரிக்கும் அமெரிக்கா: ரஷ்யாவின் அடுத்த கட்ட நகர்வு!

பஷர் அல்-அசாத்தை வீழ்த்த அமெரிக்கா வகுத்த திட்டம்!

பஷர் அல்-அசாத்தை வீழ்த்த அமெரிக்கா வகுத்த திட்டம்!