இன்றைய வானிலை அறிக்கை!

நாட்டின் கிழக்கு திசையில் எதிர்வரும் சில தினங்களுக்கு அலைவடிவிலான தளம்பல் நிலை ஒன்று வானிலை நிலமையோடு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

அடுத்துவரும் சில தினங்களில் கிழக்குக் திசையில் அலைவடிவிலான தளம்பல் நிலை ஒன்று வானிலை நிலைமையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

இதன் தாக்கத்தின் காரணமாக எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படும்.

இதேவேளை வடகீழ் பருவப் பெயர்ச்சிக்குரிய காலநிலையும் படிப்படியாக ஆரம்பிக்கின்றது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.

சப்ரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் பல இடங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சீரான வானிலை காணப்படும்.

தெற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதியில் இன்றைய தினத்தில் தாழ் அமுக்கப் பிரதேசம் ஒன்று விருத்தியடையக்கூடும். இது வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியை அடைந்து மேற்கு – வடமேற்குத் திசையினூடாக நகர்ந்து எதிர்வரும் 12 ஆம் திகதியளவில் தமிழ் நாட்டுக் கரையை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகையினால் வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் கடல் பிராந்தியத்திற்கு செல்லும் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வழங்கப்படுகின்ற எதிர்கால எதிர்வு கூறல்களை கவனத்திற் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

மட்டக்களப்பு தொடக்கம் திருகோணமலை ஊடாக காங்கேசன்துறை வரையான கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.

களுத்துறை தொடக்கம் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 – 40 கிலோமீற்றர் வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து காற்று வீசும்.

இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

 

 

Related News

களுத்துறையில் வீடொன்றில் தீ விபத்து!

வாதுவை, பொத்துபிட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். களுத்துறை மாநகர சபையின் தீயணைப்புப் படையினர் மற்றும் பிரதேசவாசிகள் சிலர் இணைந்து தீ பரவலை கட்டுப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் விபத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில் அந்த…

Read More
மின்சாரத்தை 4 முதல் 5 மணி நேரம் வரை துண்டிக்க நேரிடும் அபாயம்!

நாட்டில், அரசாங்கம் மாறினாலும் மின்சார சபைக்குள் மின்சார மாபியா செயற்படுவதாக இலங்கை மின்சார சபை தொழில்நுட்ப பொறியியலாளர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கத்தின் உப தலைவர் நந்தன உதயகுமார தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், நீர் மின் நிலையங்களுக்கு அருகில் உள்ள நீர்த்தேக்கங்களில்…

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

களுத்துறையில் வீடொன்றில் தீ விபத்து!

களுத்துறையில் வீடொன்றில்  தீ விபத்து!

மின்சாரத்தை 4 முதல் 5 மணி நேரம் வரை துண்டிக்க நேரிடும் அபாயம்!

மின்சாரத்தை 4 முதல் 5 மணி நேரம் வரை துண்டிக்க நேரிடும் அபாயம்!

யாழில் பரவி வரும் காய்ச்சலால் மேலும் ஒருவர் உயிரிழப்பு!

யாழில் பரவி வரும் காய்ச்சலால் மேலும் ஒருவர் உயிரிழப்பு!

சிரியாவில் ஐஎஸ் அமைப்பு தொடர்பாக அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் கருத்து!

சிரியாவில் ஐஎஸ் அமைப்பு தொடர்பாக அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் கருத்து!

நடிகர் துல்கர் சல்மான் வெளியிட்ட சமுத்திரக்கனியின் ‘திரு. மாணிக்கம்’ பட முன்னோட்டம்

நடிகர் துல்கர் சல்மான் வெளியிட்ட சமுத்திரக்கனியின் ‘திரு. மாணிக்கம்’ பட முன்னோட்டம்

ஆசிய சதுரங்க இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ள யாழ் மாணவி!

ஆசிய சதுரங்க இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ள யாழ் மாணவி!