கொழும்பு, கொள்ளுப்பிட்டி டுப்ளிகேஷன் வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இந்த விபத்து இன்று இடம்பெற்றுள்ளது.
லொறி ஒன்று கொள்ளுப்பிட்டியில் இருந்து பம்பலப்பிட்டி நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது முச்சக்கரவண்டியின் சாரதி காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.