மின்சாரத்தை 4 முதல் 5 மணி நேரம் வரை துண்டிக்க நேரிடும் அபாயம்!

நாட்டில், அரசாங்கம் மாறினாலும் மின்சார சபைக்குள் மின்சார மாபியா செயற்படுவதாக இலங்கை மின்சார சபை தொழில்நுட்ப பொறியியலாளர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கத்தின் உப தலைவர் நந்தன உதயகுமார தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில்,

நீர் மின் நிலையங்களுக்கு அருகில் உள்ள நீர்த்தேக்கங்களில் வான்கதவுகள் போடப்பட்டுள்ளதுடன் நாட்டில் நிலக்கரி அதிகம் உள்ள இந்நாட்களில் இலங்கை மின்சார சபை தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்துள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

மின்சார சபையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தொடர்பான தகவல்களை முன்வைப்பதற்காக கொழும்பில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சாரம் வாங்கும் தந்திர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மேலும், நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் ஒரு ஜெனரேட்டர் கூட அதிகபட்ச கொள்ளளவில் இயங்கவில்லை எனவும், மின் வாரியத்தில் நீண்ட நாட்களாக இயங்கி வரும் மின் மாபியா மீண்டும் தலை தூக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மின்கட்டண உயர்வுக்கு இந்த மின்சார மாபியா பெரும் பிரச்சினையாக மாறியுள்ளதாகவும், நீர் மின்சாரம் மற்றும் நிலக்கரியை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் திறன் உள்ள நிலையில் தனியாரிடம் மின்சாரம் வாங்குவது பெரும் விரயமாகும்.

அவ்வாறு மின்சார சபை அதிகாரிகள் செய்தால் அடுத்த வருடம் பெப்ரவரி, மார்ச் மாதங்களில் வறண்ட காலநிலையில் மின்சாரத்தை கொள்வனவு செய்ய சபையிடம் பணம் இருக்காது. அவ்வாறு ஏற்பட்டால் மீண்டும் 4 முதல் 5 மணி நேரம் மின்சாரத்தை துண்டிக்க நேரிடலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related News

77ஆவது சுதந்திர தின நிகழ்வில் பொது மக்கள் பங்கேற்க முடியும்!

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி நடைபெறவுள்ள நாட்டின் 77ஆவது சுதந்திர தின நிகழ்வில் பொது மக்கள் பங்கேற்க முடியும் பொது நிர்வாக அமைச்சர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன தெரிவித்துள்ளார். மேலும், சுதந்திர தின நிகழ்வுகளுக்காக 80 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டள்ளது.…

Read More
வாகன இறக்குமதிக்கான அனுமதி இன்று முதல் வழங்கப்பட்டுள்ளது.

வாகன இறக்குமதிக்கான அனுமதி இன்று(28.01) முதல் வழங்கப்பட்டுள்ளது. நிதியமைச்சராக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இதற்கான விசேட வர்த்தமானி அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார்.   இந்த அறிவிப்பின் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த வாகன இறக்குமதியை மீள ஆரம்பிக்கலாம். பெப்ரவரி மாதம் முதல் இறக்குமதி அனுமதி…

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

77ஆவது சுதந்திர தின நிகழ்வில் பொது மக்கள் பங்கேற்க முடியும்!

77ஆவது சுதந்திர தின நிகழ்வில் பொது மக்கள் பங்கேற்க முடியும்!

‘ ஜன நாயகன்’

‘ ஜன நாயகன்’

அறிமுக விருதுகள்!

அறிமுக விருதுகள்!

வாகன இறக்குமதிக்கான அனுமதி இன்று முதல் வழங்கப்பட்டுள்ளது.

வாகன இறக்குமதிக்கான அனுமதி இன்று முதல் வழங்கப்பட்டுள்ளது.

அரசுக்கு சொந்தமான சொகுசு வாகனங்கள் கண்டுபிடிப்பு!

அரசுக்கு சொந்தமான சொகுசு வாகனங்கள் கண்டுபிடிப்பு!

மருந்துகளின் விலையைக் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது!

மருந்துகளின் விலையைக் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது!