கிளிநொச்சியில், இரண்டு சடலங்கள் சற்று முன்னர் பாலம் ஒன்றின் அடியில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி A 35 வீதியில் அமைந்துள்ள புளியம்பொக்கணை 10ஆம் கட்டை பாலத்திற்கு அடியில் இருந்து ஒன்றாக இந்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பாலத்தின் புனரமைப்புப் பணிகள் கைவிடப்பட்டு காணப்படும் நிலையில், அங்கு அடிக்கடி விபத்துக்கள் நிகழ்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், தற்போது மீட்கப்பட்ட சடலங்கள் விபத்தினால் உயிரிழந்தவர்களது சடலங்களா, அல்லது வேறு காரணங்களினால் ஏற்பட்ட உயிரிழப்பா என்பது தொடர்பில் இதுவரை தெரியவரவில்லை.
மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பரந்தன் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.