இந்திய பெருங்கடல் அருகே, இரண்டு படகுகள் விபத்துக்குள்ளாக்கியதில் சோமாலிய நாட்டை சேர்ந்த 24 பேர் உயிரிழந்து உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் கருத்து தெரிவிக்கின்றன.
மேலும் கிழக்கு ஆபிரிக்க நாடான சோமாலியவை சேர்ந்த பலர் பொருளாதார வாய்ப்புகளை தேடி ஐரோப்பாவுக்குள் நுழைய ஆபத்தான கடல் வழி பயணத்தை மேற்கொண்டு பல விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில் சோமாலியவை சேர்ந்த 70 பேர் 2 படகுகளில் இந்திய பெருங்கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு ஆபத்தான பயணம் மேற்கொண்ட நிலையிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இவ் விபத்தில் 24 பேர் உயிரிழந்த நிலையில் 46 பேர் உயிருடன் மீட்கபட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் கருத்து தெரிவிக்கின்றன.