அமெரிக்காவின் உதவி செயலாளர் டொனால்ட் லூ இலங்கைக்கு விஜயம்!

தென் மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவிச் செயலாளர் டொனால்ட் லூ எதிர்வரும் 5 ஆம் திகதி இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

இம் மாதம் 10 ஆம் திகதி வரை இந்தியா, இலங்கை மற்றும் நேபாளத்திற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

டொனால்ட் லூவின் விஜயமானது தென் ஆசியாவிலுள்ள முக்கிய பங்குதாரர்களுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, பிராந்திய வளர்ச்சி மற்றும் பாதுகாப்பை ஊக்குவிக்கவுள்ளது.

அமெரிக்காவின் உதவி செயலாளர் டொனால்ட் லூ , இந்தியா மற்றும் ஐக்கிய அமெரிக்காவுக்கு இடையிலான ஒத்துழைப்பை ஆதரித்தும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் முக்கியத்தும் குறித்து இந்தியாவின் புதுடில்லியில் இடம்பெறும் முக்கிய சந்திப்புகளில் பங்கேற்கின்றார்.

டொனால்ட் லூ , கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்தின் பணியாளர் செயலாளர் டேனியல் க்ரிடன்பிரிங்குடன் இணைந்து, அமெரிக்காவின் பங்குபற்றலை இந்தியா – அமெரிக்கா கிழக்கு ஆசியா ஆலோசனைகளை (U.S.-India East Asia Consultations) முன்னேடுப்பார். இந்த ஆலோசனைகளும், இந்திய அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் தனித்தனியே மேற்கொள்ளப்படும் சந்திப்புகளும் உலக மற்றும் பிராந்திய விவகாரங்களில் முக்கிய பங்காற்றும்.

எதிர்வரும் 5 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யும் தென் மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவிச் செயலாளர் டொனால்ட் லூ, அமெரிக்கா மற்றும் இலங்கை கூட்டாக இணைந்து நிலையான பொருளாதார வளர்ச்சி, ஊழல் எதிர்ப்பு மற்றும் மக்களுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளை முன்னிலைப்படுத்துவார்.

அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி முகாமைத்துவத்திற்கான துணை உதவியாளர் அஞ்சலி கவூர் மற்றும் பொருளாதார அமைச்சக அதிகாரி ரொபர்ட் காப்ரோத் ஆகியோர், இலங்கையின் புதிய அரசாங்கத்தின் சிரேஷ் அதிகாரிகளுடன், மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் சந்திப்புகளுக்களிலும் டொனால்ட் லூ, இணைந்து கொள்வார்.

இந்த சந்திப்புகள் புதிய அரசாங்கத்துடன் உறவுகளை வலுப்படுத்தி, அதன் ஊழல் எதிர்ப்பு முயற்சிகளை ஆதரித்து, நிதி மற்றும் திறன் கட்டமைப்பின் மூலம் இலங்கையின் ஆட்சி மற்றும் பொருளாதார சீரமைப்பு திட்டங்களை ஆதரிக்கும் வகையில் அமெரிக்கா எவ்வாறு உதவி வழங்கும் என்பது குறித்து ஆராயப்படும்.

தனது பயணத்தை நேபாளத்தின் காத்மாண்டுவில் நிறைவுசெய்யவுள்ள டொனால்ட் லூ, அங்கு தொடர்புகளை வலுப்படுத்தி, சுற்றுப்புறப் பாதுகாப்பு, பெண்கள் அதிகாரம், நிலையான அபிவிருத்தி போன்ற பிரச்சினைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவார். எதிர்கால அமெரிக்கா-நேபாள உறவுகளுக்கான இளம் தலைமுறையினரின் கருத்துக்களை அறிந்து கொள்ளும் நோக்கில் இந்த சந்திப்பை மேற்கொள்ளவுள்ளார்.

Related News

77ஆவது சுதந்திர தின நிகழ்வில் பொது மக்கள் பங்கேற்க முடியும்!

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி நடைபெறவுள்ள நாட்டின் 77ஆவது சுதந்திர தின நிகழ்வில் பொது மக்கள் பங்கேற்க முடியும் பொது நிர்வாக அமைச்சர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன தெரிவித்துள்ளார். மேலும், சுதந்திர தின நிகழ்வுகளுக்காக 80 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டள்ளது.…

Read More
வாகன இறக்குமதிக்கான அனுமதி இன்று முதல் வழங்கப்பட்டுள்ளது.

வாகன இறக்குமதிக்கான அனுமதி இன்று(28.01) முதல் வழங்கப்பட்டுள்ளது. நிதியமைச்சராக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இதற்கான விசேட வர்த்தமானி அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார்.   இந்த அறிவிப்பின் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த வாகன இறக்குமதியை மீள ஆரம்பிக்கலாம். பெப்ரவரி மாதம் முதல் இறக்குமதி அனுமதி…

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

77ஆவது சுதந்திர தின நிகழ்வில் பொது மக்கள் பங்கேற்க முடியும்!

77ஆவது சுதந்திர தின நிகழ்வில் பொது மக்கள் பங்கேற்க முடியும்!

‘ ஜன நாயகன்’

‘ ஜன நாயகன்’

அறிமுக விருதுகள்!

அறிமுக விருதுகள்!

வாகன இறக்குமதிக்கான அனுமதி இன்று முதல் வழங்கப்பட்டுள்ளது.

வாகன இறக்குமதிக்கான அனுமதி இன்று முதல் வழங்கப்பட்டுள்ளது.

அரசுக்கு சொந்தமான சொகுசு வாகனங்கள் கண்டுபிடிப்பு!

அரசுக்கு சொந்தமான சொகுசு வாகனங்கள் கண்டுபிடிப்பு!

மருந்துகளின் விலையைக் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது!

மருந்துகளின் விலையைக் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது!