மத்திய வங்கி திறைசேரி பிணை முறி மோசடி குறித்த விசாரணைகள் பற்றி கருத்து தெரிவித்துள்ள ஜனாதிபதிஅர்ஜூனமகேந்திரன் சிங்கப்பூர் பிரஜைஎன்பதால் அவரை இலங்கைக்கு கொண்டுவருவது கடினமாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த விவகாரத்தின் பாரதூரதன்மையை சிங்கப்பூர் அரசாங்கத்திற்கு தெளிவுபடுத்தி,அர்ஜூனமகேந்திரனை இலங்கைக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.