கலிபோர்னியாவில் காட்டுதீயினால் ஐந்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ள நிலையில் தனது சகோதரன் தீயிலிருந்து தனது வீட்டை பாதுகாக்க முயன்றவேளை உயிரிழந்தார் என பெண்ணொருவர் தெரிவித்துள்ளார்.
தனது சகோதரனை விட்டுவிட்டு தான் வெளியேறவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்ட தருணங்களை அந்த பெண் விபரித்துள்ளார்.
அல்டடெனா பகுதியில் காட்டு தீ வேகமாக பரவத்தொடங்கியதும் தீயணைப்பு வீரர்கள் எங்களை அங்கிருந்து வெளியேறுமாறு மன்றாட்டமாக கேட்டனர் ஆனால் எனது சகோதரன் அவர்களின் வேண்டுகோளை செவிமடுக்கவில்லை என ஷாரிசோ என்ற பெண் தெரிவித்துள்ளார்.
எனது 66 வயது சகோதரன் என்னுடன் வசித்துவந்தார், அவர் கடும் உடல்நலபாதிப்புகளை எதிர்கொண்டிருந்த ஒருவர் ,அவர் தான் அங்கேயே தங்கியிருந்து வீட்டை பாதுகாக்க முயலப்போகின்றேன் என தெரிவித்தார் என குறிப்பிட்டுள்ள ஷாரிசோ நான் அவரை அங்கேயே விட்டுவிட்டு வரும் மனதை வருத்தும் முடிவை எடுக்கவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானேன் என தெரிவித்துள்ளார்.
தீ மிகப்பெரியதாக தீப்புயல் போல காணப்பட்டதால் நான் அங்கிருந்து வெளியேறும் முடிவை எடுக்கவேண்டியிருந்தது,நான் புறப்பட்டவேளை திரும்பிபார்த்தேன் வீடுதீயின் பிடியில் சிக்குண்டிருந்தது நான் அங்கிருந்து வெளியேறவேண்டியிருந்தது எனஅவர் தெரிவித்துள்ளார்.
55 வருடங்களாக தனது பெற்றோர் வாழ்ந்த வீட்டை அவர் பாதுகாக்க முயன்றுள்ளார் போல தோன்றுகின்றது என ஷாரிசோ தெரிவித்துள்ளார்.