இத்தாலி மற்றும் ருமேனியா ஆகிய நாடுகளில் வேலை வாய்ப்புப் பெற்றுத் தருவதாக கூறி பண மோசடி செய்ததாக கூறப்படும் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்பாந்தோட்டை தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.
அம்பாந்தோட்டை தலைமையக பொலிசாருக்கு கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அம்பாந்தோட்டை, சமரகோன்வெவ பிரதேசத்தில் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சந்தேக நபர் அம்பாந்தோட்டை, வீரகெட்டிய, ஹுங்கம, அம்பலாந்தோட்டை, சூரியவெவ மற்றும் திஸ்ஸமஹாராமை ஆகிய பிரதேசங்களில் உள்ள பல்வேறு நபர்களிடம் இத்தாலி மற்றும் ருமேனியா ஆகிய நாடுகளில் வேலை வாய்ப்புப் பெற்றுத் தருவதாக கூறி பல இலட்சம் ரூபா மோசடி செய்து தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் தலைமறைவாகி இருந்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்கள் இது தொடர்பில் அம்பாந்தோட்டை தலைமையக பொலிசாரிடம் முறைப்பாடுகள் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து, விசாரணைகளை ஆரம்பித்த பொலிசார் அம்பாந்தோட்டை, சமரகோன்வெவ பிரதேசத்தில் வைத்து சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பாந்தோட்டை தலைமையக பொலிசார் கொண்டு வருகின்றனர்.