நடிகை சமந்தா, தென்னிந்திய ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடும் ஒரு சிறந்த நடிகையாக வலம் வருகிறார். சினிமாவில் சாதித்த இவர் தொடர்ந்து நிறைய தொழில்களையும் கவனித்து வருகிறார்.
நடிப்பு, தொழில் என பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கும் போது பெரிய தடையாக அமைந்தது மயோசிடிஸ் என்ற நோய் பாதிப்பு. நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டவர் இப்போது தான் கொஞ்சம் அதில் இருந்து மீண்டுள்ளார்.
படங்களை தாண்டி வெப் தொடர்களில் பிஸியாக நடிக்க கமிட்டாகி வருகிறார். கடைசியாக சமந்தா நடிப்பில் ‘சிடாடல் ஹனி பன்னி’ என்ற வெப் தொடர் வெளியாகி இருந்தது.
இந்நிலையில், நடிகை சமந்தா குறித்து பேட்டி ஒன்றில் பின்னணி பாடகி சின்மயி கூறிய விஷயம் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில்,” சமந்தா ஒரு சிறந்த நடிகை மட்டுமின்றி மிகவும் நல்ல குணம் கொண்ட ஒருவரும் ஆவார்.
அவர் உடலளவிலும், மனதளவிலும் படாத பாடுப்பட்டார் , பல கஷ்டங்கள் இருந்தும் அதை பற்றி கண்டு கொள்ளாமல் தைரியமாக இன்றும் பலருக்கு எடுத்துக்காட்டாக பயணித்து வருகிறார்.
அவர் யாருக்கும் சளைத்தவர் இல்லை என்று அவருடைய கடினமான உழைப்பின் மூலம் காட்டி வருகிறார்” என புகழ்ந்து பேசியுள்ளார்.