நிதிஷ் திவாரி இயக்கத்தில் ராமாயணம் கதையை மையமாக வைத்து தயாராகும் ‘ராமாயணம்’ படத்தில் ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி , அனுமானாக சன்னி தியோல், கும்பகர்ணனாக பாபிதியோல் ஆகியோர் நடிக்கின்றனர்.
இப்படத்தில் லட்சுமணனாக நடிப்பது யார் என்பது ரசிகர்களிடம் பெரிய கேள்வியாக இருந்தது. இப்போது அதற்கான பதில் கிடைத்துள்ளது.
லட்சுமணனாக பிரபல நடிகர் ரவி துபே நடிக்கிறார் என அவரே தெரிவித்துள்ளார்.
1,000 கோடி ரூபா பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாகி வரும் ராமாயணம் படத்தின் முதல் பாகம் 2026-ம் ஆண்டு தீபாவளிக்கும் இரண்டாம் 2027-ம் ஆண்டு தீபாவளிக்கும் வெளியாக உள்ளது. குறிப்பிடத்தக்கது.