மலேசியாவில் எதிர்வரும் 18ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை குழாத்தை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் சற்று நேரத்திற்கு முன்னர் வெளியிட்டது.
மலேசியாவில் கடந்த வருட இறுதியில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட், நேற்று நிறைவடைந்த பங்களாதேஷ் அணிக்கு எதிரான 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 கிரிக்கெட் தொடர் ஆகியவற்றில் இடம்பெற்ற அதே வீராங்கனைகளே 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ணத்திற்கான அணியிலும் இடம்பெறுகின்றனர்.
19 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் அணியின் தலைவியாக மொறட்டுவை, பிறின்சஸ் ஒவ் வேல்ஸ் கல்லூரி வீராங்கனை மனுதி நாணயக்கார மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.