17 வயதுக்குற்பட்ட இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையில் நடைபெறவுள்ள முதல் இரண்டு ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான 15 பேர் அடங்கிய இலங்கை குழாம் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தால் நிர்ணயிக்கப்பட்டது.
பங்களாதேஷ் அணியுடன் 17 வயத்திற்குற்பட்டோருக்கான மூன்று ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் ஏதிர்வரும் 24 , 26 மற்றும் 28 திகதிகளில் இடம்பெறும்.
இந்நிலையில் 17 வயத்திற்குற்பட்ட இலங்கை அணியின் தலைவராக கொழும்பு ஆனந்த கல்லூரி வீரர் கித்ம வித்தானபத்திரனவும் உப தலைவராக பதவி மருதானை புனித சூசையப்பர் கல்லூரி வீரர் செனுஜ வெகுங்கொடவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த அணியில் யாழ்ப்பாண ஹாட்லி கல்லூரியின் சுழல் பந்துவீச்சாளர் விக்னேஸ்வரன் ஆகாஸ் பெயரிடப்பட்டதுடன், அவர் 17 வயத்திற்குற்பட்டோருக்கான மாகாண அணிகிடைலான தொடரில் தம்புள்ளை அணிக்காக விளையாடி இருந்தார்.