மேலதிக வகுப்பு மாணவர்களிடம் கையடக்கத் தொலைபேசிகள் திருட்டு ; சந்தேக நபர் கைது!

கண்டி பிரதேசத்தில் மேலதிக வகுப்புகளுக்குச் செல்லும் மாணவர்களின் கையடக்கத் தொலைபேசிகளை திருடியதாக கூறப்படும் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கண்டி பொலிஸ் பிரிவினர்
தெரிவித்துள்ளனர்.

கண்டி பொலிஸ் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கண்டி, தலதா வீதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கண்டி, கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடையவர் ஆவார்.

சந்தேக நபர் பஸ் தரிப்பிடங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் உள்ள மேலதிக வகுப்பு மாணவர்கள் மற்றும் ஏனைய நபர்களின் கையடக்கத் தொலைபேசிகளை திருடி அதனை கையடக்கத் தொலைபேசி விற்பனை நிலையங்களில் குறைந்த விலைக்கு விற்பனை செய்து பணத்தைப் பெறுவதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து பொலிசாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், திருடிய கையடக்கத் தொலைபேசிகளை கொள்வனவு செய்ததாகக் கூறப்படும்  தொலைபேசி விற்பனை நிலைய உரிமையாளரும் சந்தேகத்தின் பேரில் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கண்டி பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Related News

கோட்டை – பதுளை விசேட ரயில் சேவைகள் ஆரம்பம் !

கோட்டை – பதுளை மற்றும் பதுளை – கோட்டைக்கு இடையில் இன்று மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்களில் விசேட ரயில் சேவைகளை வழங்க ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து இன்று இரவு 7.30…

Read More
சர்ச்சைக்குரிய ஈ விசா மற்றும் ஈ கடவுச்சீட்டு கணக்காய்வு அறிக்கைகள் தொடர்பில் வெளியான தகவல்!

சர்ச்சைக்குரிய ஈ விசா (eVisa) மற்றும் ஈ கடவுச்சீட்டு (ePassport) பரிவர்த்தனைகள் தொடர்பான கணக்காய்வு அறிக்கைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் டப்ளியூ.பீ.சி.விக்ரமரத்ன தெரிவித்துள்ளார் இந்த விசாரணைகள் ஏறக்குறைய நிறைவடைந்துள்ளதாகவும், பல முறைகேடுகள் தெரியவந்துள்ளதாகவும் தேசிய…

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

2வது நாளே செம அடி வாங்கிய அட்லீ தயாரித்த பேபி ஜான்… மோசமான கலெக்ஷன்!

2வது நாளே செம அடி வாங்கிய அட்லீ தயாரித்த பேபி ஜான்… மோசமான கலெக்ஷன்!

சூப்பர்ஸ்டர் ரஜனிகாந்தின் கூலி படம் தொடர்பாக வெளியான தகவல் !

சூப்பர்ஸ்டர் ரஜனிகாந்தின் கூலி படம் தொடர்பாக வெளியான தகவல் !

மன்மோகன் சிங் உடலுக்கு இந்திய பிரதமர் மோடி அஞ்சலி!

மன்மோகன் சிங் உடலுக்கு இந்திய பிரதமர் மோடி அஞ்சலி!

பிஹாரில் மாணவர்கள் போராட்டத்தில் தடியடி – ராகுல், பிரியங்கா கண்டனம்!