மன்மோகன் சிங் உடலுக்கு இந்திய பிரதமர் மோடி அஞ்சலி!

மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட பல தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங்கிற்கு
நேற்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் டில்லி எய்ம்ஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார்.

இதையடுத்து, மன்மோகன் சிங்கின் உடல் டில்லியில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் . அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் நாளை தகனம் செய்யப்படவுள்ளது.

இந்நிலையில், டில்லியில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கின் உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதன்படி, பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்பட பலரும் மன்மோகன் சிங்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தலைவர்கள் அஞ்சலி செலுத்திய பின் மன்மோகன் சிங்கின் உடல் நாளை பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட உள்ளது.

Related News

பிஹாரில் மாணவர்கள் போராட்டத்தில் தடியடி – ராகுல், பிரியங்கா கண்டனம்!

வினாத்தாள் கசிவு விவகாரத்தில் பிஹார் அரசு பணியாளர் தேர்வாணையகத்துக்கு எதிராக போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது பொலிசார் தடியடி நடத்தியதற்கு எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர். இதுகுறித்து ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ்…

Read More
இஸ்ரேலின் தாக்குதலில் பலியான 5 ஊடகவியலாளர்கள்!

காசா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 5 ஊடகவியலாளர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த 2023ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்திலிருந்து காஸா பகுதிகளின் மீது இஸ்ரேல் தொடர்ந்து போர்தொடுத்து வருகின்றது. இதில், சுமார் 45,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள்…

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

2வது நாளே செம அடி வாங்கிய அட்லீ தயாரித்த பேபி ஜான்… மோசமான கலெக்ஷன்!

2வது நாளே செம அடி வாங்கிய அட்லீ தயாரித்த பேபி ஜான்… மோசமான கலெக்ஷன்!

சூப்பர்ஸ்டர் ரஜனிகாந்தின் கூலி படம் தொடர்பாக வெளியான தகவல் !

சூப்பர்ஸ்டர் ரஜனிகாந்தின் கூலி படம் தொடர்பாக வெளியான தகவல் !

மன்மோகன் சிங் உடலுக்கு இந்திய பிரதமர் மோடி அஞ்சலி!

மன்மோகன் சிங் உடலுக்கு இந்திய பிரதமர் மோடி அஞ்சலி!

பிஹாரில் மாணவர்கள் போராட்டத்தில் தடியடி – ராகுல், பிரியங்கா கண்டனம்!

பிஹாரில் மாணவர்கள் போராட்டத்தில் தடியடி – ராகுல், பிரியங்கா கண்டனம்!

கோட்டை – பதுளை விசேட ரயில் சேவைகள் ஆரம்பம் !

கோட்டை – பதுளை விசேட ரயில் சேவைகள் ஆரம்பம் !

மேலதிக வகுப்பு மாணவர்களிடம் கையடக்கத் தொலைபேசிகள் திருட்டு ; சந்தேக நபர் கைது!

மேலதிக வகுப்பு மாணவர்களிடம் கையடக்கத் தொலைபேசிகள் திருட்டு ; சந்தேக நபர் கைது!