போதைப்பொருளுடன் இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 11 மீனவர்கள் கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இந்தியக் கடற்பரப்பில் வைத்து கடந்த 25 ஆம் திகதி, படகொன்றில் 400 கிலோ கிராமுக்கும் அதிகளவான ஐஸ் ரக போதைப்பொருளைக் கடத்திய நிலையில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அத்துடன், போதைப்பொருள் வைக்கப்பட்டிருந்த படகொன்று கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் மற்றுமொரு படகும் கைப்பற்றப்பட்டிருந்தது.
இந்தக் குழுவினர் கடந்த 29 ஆம் திகதி இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.