அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப் பனாமா கால்வாயையும் கீறின்லாந்தையும் கைப்பற்றப்போவதாக மீண்டும் தெரிவித்துள்ளார்.
டொனால்ட் டிரம்ப் சிலவாரங்களிற்கு முன்னர் இதேகருத்தினை வெளியிட்டுள்ளதை தொடர்ந்து இந்த விடயம் சர்வதேச அரசியலில் முக்கியமானதாக மாறியுள்ள நிலையில் ஜனாதிபதி மீண்டும் இதனை தெரிவித்துள்ளார்.
பொருளாதார பலத்தை பயன்படுத்தி பனாமா கால்வாயையும் கிறீன்லாந்தையும் கைப்பற்றுவாரா அல்லது படைபலத்தை பயன்படுத்துவாரா என்ற கேள்விக்கு பதிலாக இல்லை இந்த இரண்டில் ஒன்றைதான் பயன்படுத்துவேன் என என்னால் உறுதியளிக்க முடியாது என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
எனினும் அமெரிக்காவின் பொருளாதார பாதுகாப்பிற்கு பனாமா கால்வாயும் கிறீன்லாந்தும் முக்கியமானவை என டிரம்ப் தெரிவித்துள்ளார்.