நாட்டில் எரிபொருள் விலை திருத்தம் இன்று அறவிடப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய இந்த திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.
கடந்த ஒக்டோபர் 31 ம் திகதி நள்ளிரவு எரிபொருள் விலையில் இறுதியாக திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
இதற்கமைய ஒக்டேன் பெற்றோல் மற்றும் சுப்பர் டீசல் ஆகியவற்றின் விலையை தாலா 6 ரூபாவால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, டிசம்பர் மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் இன்று அறிவிக்கப்படவுள்ளது.