ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும் சீனா கம்பூனியர்ஸ் கட்சி மத்திய குழுவின் சர்வதேச திணைக்கள உப அமைச்சர் சன் ஹையான் தலைமைலான சீனா தூதுக்குழுவிற்கும் இடையிலான சந்திப்பின்போது
இலங்கையுடன் நெருக்கமான ஒத்துழைப்புடன் செயற்படவும் மேலும் முதலீட்டு ஊக்குவிப்பு, தொழிநுட்ப பரிமாற்றம், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தி முயற்சிகளில் இலங்கைக்கு ஆதரவளிக்க தயார் எனவும் சீனா தெரிவித்துள்ளது.
மேலும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றமைக்கும், பொது தேர்தலில் அவரது கட்சிக்கு கிடைத்த வெற்றிக்கும் வாழ்த்து தெரிவித்த சீனா உப அமைச்சர் இந்த வெற்றிகளின் பின்னர் இலங்கைக்கு ஏற்டபட்டுள்ள பரிமாண வளர்ச்சிக்கும் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கல்வித்துறையில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு பயிற்சியளித்து இலங்கையின் மனிதவள மேம்பாட்டை மேம்படுத்த சீனா ஆதரவு வழங்கும் எனவும் சீனா தூதுக்குழு ஜனாதிபதியிடன் உறுதியளித்துள்ளது.