அமெரிக்க டொலருக்கு பதிலாக புதிய நாணயத்தை கொண்டுவர முயற்சிக்கும் பிரிக்ஸ் அமைப்பின் முயற்சிக்கு அமெரிக்காவின் ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள டொனால்ட் ட்ரம்ப் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
பிரிக்ஸ் கூட்டமைப்பில் தற்போது பிரேசில், இந்தியா, ரஷ்யா, சீனா, ஈரான், தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளுடன் சவூதி அரேபியா, எத்தியோப்பியா, எகிப்து, ஐக்கிய அரபு இராச்சியம் உள்ளிட்ட நாடுகளும் அங்கம் வகிக்கின்றன.
கடந்த ஆண்டுகளாக , உறுப்பு நாடுகளான ரஷ்யா மற்றும் சீனா அமெரிக்கா டொலருக்கு மாற்றாக பிரிக்ஸ் நாணயத்தை உருவாக்க முயற்சி செய்கின்றன.
இது குறித்து தமது எஸ் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் இதற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
பிரிக்ஸ் அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகள் டொலர் பரிவர்த்தனையில் இருந்து விலகி செல்ல முயல்கின்றன.
இந்த நாடுகள் புதிய பிரிக்ஸ் நாணயத்தை உருவாக்கவோ அல்லது அமெரிக்க டொலருக்கு பதிலாக வலிமைமிக்க வேறு எந்த நாணயத்தையும் உருவாக்க முயற்சி செய்தால் அவர்களுக்கு 100 சதவீத வரி அறவிடப்படும் எனவும் எந்த நாடாளும் அமெரிக்க நாட்டின் டொலரை மாற்ற முடியாது எனவும் அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.