காரைதீவு – மாவடிப்பள்ளி பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் உழவு வண்டி ஒன்று அடித்துச்சென்றதை அடுத்து காணாமல் போயிருந்த மற்றுமொரு சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதன்படி, கடந்த 26 ம் திகதி வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட உழவு வண்டியில் பயணித்தவர்களில் 8 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சிலர் அன்றைய தினமே மீட்கப்பட்டனர்.
இவ்வாறு, அனர்த்தத்தில் சிக்கிருந்த எட்டு பேரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்தில் மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைதான மதரஸா பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியர் ஒருவரும் எதிர்வரும் 2 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.