இந்தியா, மணிப்பூரில் வன்முறை சம்பவங்கள் மீண்டும் அதிகரித்துள்ளது, பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆராய, இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் டெல்லியில் நேற்று அவசர ஆலோசனை கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில், தேசிய பாதுகாப்பு ஆலோச கர் அஜித் தோவல், உள்துறை செயலர் கோவிந்த் மோகன், உளவுத் துறை இயக் குநர் தபன்டிகா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.
வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூருக்கு அதிகமான படையினரை அனுப்பவும், அங்கு விரைவில் முழு அமைதியை ஏற்படுத்த கவனம் செலுத்து மாறும் அமித் ஷா அறிவுறுத்தினார். மணிப்பூர் மக்களை வன்முறையில் இருந்து பாதுகாத்து, அமைதியை நிலை நாட்டும் வகையில் கூடுதலாக 5,000 வீரர்கள் அடங்கிய துணைராணுவப்படையை அனுப்ப மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (சிஆர்பிஎப்) இருந்து 35 யூனிட், எல்லை பாதுகாப்புபடை படையில் (பிஎஸ்எப்) இருந்து 15 யூனிட் என மொத்தம் 50 கம் பெனி துணை ராணுவப்படையினர் விரைவில் மணிப்பூர் செல்கின்றனர்.
மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் ஒரு கும்பல் பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தது. அதைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அதவுபா (20) என்ற போராட்டக்காரர் உயிரிழந்தார். “அவரை சுட்டது யார் என்பது இது வரை தெளிவாக தெரியவில்லை. இருப்பினும், கண்ணால் கண்ட சாட்சியின் வாக்குமூலம் அடிப்படையில் இளைஞரின் உடம்பில் பாய்ந்த குண்டு, பாதுகாப்பு படையினரிடம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகின்றதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார். மேலும் பதற்றமான சூழல் நிலவுவதால், மாநிலத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.