கடவத்தை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மாவரமண்டிய வீதியில் நேற்று மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிசார்
தெரிவித்தனர்.
செலுத்துனரின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மின் கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மாவரமண்டியவிலிருந்து கடவத்தை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தின் போது மோட்டார் சைக்கிளின் செலுத்துனரும் பின்புறத்தில் பயணித்த நபரும் படுகாயமடைந்துள்ள நிலையில் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிசார்
தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் சிகிரியா பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் ஆவார்.
உயிரிழந்தவரின் சடலம் ராமக வைத்தியசாலையில் …