“போர் நிறுத்தம் செய்ய தயார்…ஆனால்” – ஒரே ஒரு கண்டிஷன் போட்ட இஸ்ரேல் பிரதமர்…!!

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே கடந்த அக்டோபர் 7ஆம் திகதி ஆரம்பித்த யுத்தம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதற்கிடையே இஸ்ரேல் ஹமாஸ் மோதலில் போரில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இத்தனை காலம் போர் நிறுத்தத்திற்கு வாய்ப்பே இல்லை என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறி வந்த நிலையில், இப்போது அவரது நிலைப்பாட்டில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. காசா மக்கள் உதவிகளைப் பெறவும் பிணையக் கைதிகள் வெளியேறும் வகையிலும் சிறிய நேரத்திற்குப் போர் நிறுத்தம் செய்வது குறித்து இஸ்ரேல் பரிசீலனை செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் சர்வதேச அழுத்தம் அதிகரிக்கும் போதிலும் முழுமையான போர் நிறுத்தத்திற்கு அவர் ஒப்புக் கொள்ளவில்லை. இது தொடர்பாகச் சர்வதேச செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த நெதன்யாகு…

காசாவில் உள்ள ஹமாஸ் ஆட்சியாளர்களை முழுமையாக அழிப்பது தான் எங்கள் நோக்கம். பாலஸ்தீனத்திடம் இருந்து இஸ்ரேலுக்குப் பாதுகாப்பு தேவை. போர் முடிந்தாலும் கூட அதன் பிறகும் பாதுகாப்பு தேவை என்றே கருதுகிறேன்.

இங்கே உலக நாடுகள் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துகின்றன. உதவி பொருட்களைச் சென்றடைய அவ்வப்போது ஓரிரு மணி நேரம் போர் நிறுத்தம் என்பதை நாங்கள் தொடர்ந்து செய்து வருகிறோம். காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைக்கவும்.

பிணையக் கைதிகள் பாதுகாப்பாக வெளியே வரவும் இது போன்ற போர் நிறுத்தங்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால், முழு வீச்சில் போர் நிறுத்தம் என்பதில் சாத்தியம் இல்லை. ஏனென்றால் அது எங்கள் போர் யுக்தியை பாதிக்கும் என்றார்.

Related News

பெண்களிற்கு எதிரான பாரிய மனித உரிமை மீறல்கள் –

பெண்கள் யுவதிகளை துன்புறுத்தியமைக்காகவும் அவர்களிற்கு எதிராக மோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டமைக்காகவும்  ஆப்கானிஸ்தானின் தலிபான் அமைப்பின் தலைவர்களை கைதுசெய்வதற்கான முயற்சிகளில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஈடுபட்டுள்ளது. பெண்கள் யுவதிகள் துன்புறுத்தப்படுகின்றமை தொடர்பில் தலிபான் அரசாங்கத்தின் சிரேஸ்ட தலைவர்களை கைதுசெய்வதற்கான பிடியாணையை…

Read More
நடிகர் சைஃப் அலிகான் மீது தாக்குதல்!

மும்பை பாந்த்ரா மேற்கு பகுதியிலுள்ள பொலிவுட் முன்னணி நடிகரான சைஃப் அலிகானின் வீட்டினுள் இன்று அதிகாலை 2:30 மணியளவில் கொள்ளையிட சென்ற நபரொருவருக்கும் சைஃப் அலிகானிற்கும் இடையில் நடந்த சண்டையில் சைஃப் அலிகான் கத்திகுத்திற்கு இலக்காகியுள்ளார். மும்பை லீலாவதி வைத்தியசாலையில் அனுமத்திக்கப்பட்ட…

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

77ஆவது சுதந்திர தின நிகழ்வில் பொது மக்கள் பங்கேற்க முடியும்!

77ஆவது சுதந்திர தின நிகழ்வில் பொது மக்கள் பங்கேற்க முடியும்!

‘ ஜன நாயகன்’

‘ ஜன நாயகன்’

அறிமுக விருதுகள்!

அறிமுக விருதுகள்!

வாகன இறக்குமதிக்கான அனுமதி இன்று முதல் வழங்கப்பட்டுள்ளது.

வாகன இறக்குமதிக்கான அனுமதி இன்று முதல் வழங்கப்பட்டுள்ளது.

அரசுக்கு சொந்தமான சொகுசு வாகனங்கள் கண்டுபிடிப்பு!

அரசுக்கு சொந்தமான சொகுசு வாகனங்கள் கண்டுபிடிப்பு!

மருந்துகளின் விலையைக் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது!

மருந்துகளின் விலையைக் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது!