போர் நிறுத்தம் செய்யும் இஸ்ரேல்; ஹமாஸ் சண்டையில் அதிரடி திருப்பம் – உற்று பார்க்கும் உலக நாடுகள்…!!!

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் தொடரும் நிலையில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு போர் நிறுத்தம் குறித்து ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் கூறுகையில்…

ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு எதிரான சண்டை தொடர்கிறது, ஆனால் குறிப்பிட்ட இடங்களில் போர் நிறுத்தம் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம். சில மணி நேரங்கள் ஆங்காங்கே போர் நிறுத்தம் செய்யத் தயாராக இருக்கிறோம். இதன் மூலம் பொதுமக்கள் போரில் இருந்து பாதுகாப்பாக வெளியேற முடியும்.

எங்கள் சண்டை ஹமாஸுக்கு எதிராகத் தான் நடந்து வருகிறது. இதனால் பாலஸ்தீனியர்கள் இடம்பெயர்வதை நாங்கள் தடுக்கவில்லை. மேலும், வலுக்கட்டாயமாக பாலஸ்தீனர்களை இடமாற்றம் செய்யவும் நாங்கள் முயலவில்லை என்பதையும் திட்டவட்டமாகச் சொல்லிக் கொள்கிறோம்.

இப்போது வடக்கு காசா பகுதியில் நாங்கள் ஒரு வலயத்தை உருவாக்கியுள்ளோம். அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டால் களத்தில் சிகிச்சை அளிக்கவும் மருத்துவமனைகளை ரெடி செய்து வருகிறோம். பொதுமக்கள் அங்கிருந்து வெளியேறவும் அனுமதித்தே வருகிறோம். எங்கள் போரை நாங்கள் இப்படிதான் நடத்தி வருகிறோம்.

காசா இப்போது முழுக்க முழுக்க ஹமாஸ் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அவர்களை விடுவித்து மீண்டும் அங்கே மக்கள் ஆட்சியை ஏற்படுத்துவதே இப்போது நமக்கு நோக்கம்.

இதையெல்லாம் நம்மால் நிச்சயம் சாதிக்க முடியும். காசாவைக் கைப்பற்ற நாங்கள் முயலவில்லை. காசாவை ஆக்கிரமிக்கும் திட்டமோ அல்லது அவர்களை வெளியேற்றும் திட்டமோ எங்களுக்கு இல்லை. அங்குள்ள ஹமாஸ் பயங்கரவாதிகளை அழிப்பது மட்டுமே எங்கள் நோக்கம். இஸ்ரேல் மீது தேவையற்ற தாக்குதல்கள் நடத்தும் ஆபத்துகளை இது குறைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related News

போர் முடிந்த பிறகு காசாவை ஆட்சி செய்ய போவது யார்? – இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் பதில்…!!!

இஸ்ரேல் மீது கடந்த மாதம் 7 ஆம் திகதி யாரும் எதிர்பாராத வகையில் திடீரென ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தியது. காசா முனையில் இருந்து ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை வீசி ஹமாஸ் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலின் இந்த தாக்குதலில் திக்குமுக்காடிப்போன இஸ்ரேல், சுதாரித்துக்…

Read More
60 ஆண்டுக்கு பின் மீண்டும் போர்; போருக்கு காரணம் யார் தெரியுமா? – திணறும் தென்கொரியா..!!

தென் கொரியா டெக்னாலஜியில் உச்சம் கண்டா நாடாக விளங்குகிறது. இப்படி நவீனத்தை நோக்கி முன்னேறி வரும் தென்கொரியா இப்போது வினோதமான மற்றும் சிக்கலான பிரச்சினையைச் சந்தித்து வருகிறது. அதாவது தென் கொரியாவில் பல இடங்களில் இப்போது மூட்டைப்பூச்சி பிரச்சினை தலைவிரித்து ஆடுகிறது.…

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

சென்னை மெரினாவில் சிரித்து கொண்டே கேட்ட செந்தில் பாலாஜி.. உடனே செய்த பொன்முடி

சென்னை மெரினாவில் சிரித்து கொண்டே கேட்ட செந்தில் பாலாஜி.. உடனே செய்த பொன்முடி

தீபாவளிக்கு திமுக தலைவர்கள் ஏன் வாழ்த்து சொல்வதே இல்லை? – காரணம் தெரியுமா..??

போர் முடிந்த பிறகு காசாவை ஆட்சி செய்ய போவது யார்? – இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் பதில்…!!!

போர் முடிந்த பிறகு காசாவை ஆட்சி செய்ய போவது யார்? – இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் பதில்…!!!

இலங்கை பெற்றோர்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை…!!

இலங்கை பெற்றோர்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை…!!

இலங்கை பரீட்சைகள் திணைக்களம் பாடசாலை மாணவர்களுக்கு விடுத்த முக்கிய அறிவிப்பு..!!!

இலங்கை பரீட்சைகள் திணைக்களம் பாடசாலை மாணவர்களுக்கு விடுத்த முக்கிய அறிவிப்பு..!!!

காதலியுடன் காளிதாஸ் ஜெயராமுக்கு பிரம்மாண்டமாக நடந்த நிச்சயதார்த்தம் – மணப்பெண் யார் தெரியுமா?

காதலியுடன் காளிதாஸ் ஜெயராமுக்கு பிரம்மாண்டமாக நடந்த நிச்சயதார்த்தம் – மணப்பெண் யார் தெரியுமா?