பிறக்க போகும் புத்தாண்டிலிருந்து அப்பியாசப் புத்தகங்களை கொள்வனவு செய்வதற்கு பாடசாலை மாணவர்களுக்கு விசேட கொடுப்பனவு ஒன்றை வழங்க எதிர்பார்ப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அமைய இந்த கொடுப்பனவினை வழங்க எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் கூறினார்.
அத்துருகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். .தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
புத்தாண்டில் பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் தொடங்கும் போது, மாணவர்களுக்கான அப்பியாசப் புத்தகங்களை கொள்வனவு செய்வதற்கு நிவாரணம் தர எதிர்பார்க்கின்றோம். அதற்கான திட்டங்களை வகுத்து வருகின்றோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.