பதுளைக்கும் எல்லவுக்கும் இடையிலான ரயில் சேவை மேலும் சில நாட்களுக்கு தாமதமாகும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பலத்த மழை காரணமாக ஹாலி-எல்ல, உடுவர பிரதேசத்தில் மண் மேடு சரிந்து வீழ்ந்துள்ளமையே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மண் மற்றும் கற்களை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, பசறை பகுதியில் மண்சரிவினால் முற்றாக தடைப்பட்ட பசறை – லுணுகல வீதியின் ஒரு பாதை இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திறக்கப்படவுள்ளது.