
மும்பை பாந்த்ரா மேற்கு பகுதியிலுள்ள பொலிவுட் முன்னணி நடிகரான சைஃப் அலிகானின் வீட்டினுள் இன்று அதிகாலை 2:30 மணியளவில் கொள்ளையிட சென்ற நபரொருவருக்கும் சைஃப் அலிகானிற்கும் இடையில் நடந்த சண்டையில் சைஃப் அலிகான் கத்திகுத்திற்கு இலக்காகியுள்ளார்.
மும்பை லீலாவதி வைத்தியசாலையில் அனுமத்திக்கப்பட்ட
அவர் அறுவை சிகிச்சைக்குற்படுத்தப்பட்டுள்ளார்.
சைஃப் அலிகானின் உடல் நிலை தொடர்பில் மும்பை லீலாவதி வைத்தியசாலையின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் நீரஜ் உத்தமானி கூறுகையில், அவருக்கு 6 இடங்களில் காயங்கள் இருந்தன. ஒரு காயம் அவரது முதுகுத் தண்டவடத்தின் அருகே உள்ளது. அதற்காக அறுவை சிகிச்சை செய்கிறோம். அறுவை சிகிச்சைக்குப் பின்னரே காயத்தின் தன்மை பற்றி மேலதிக தகவல்களைத் தெரிவிக்க முடியும்” என்றார்.
இச்சம்பவம் குறித்து மும்பை பொலிஸார் மற்றும் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.