தளபதி 68 இல் ‘மங்காத்தா’ வைப்; மாஸ் தகவலா இருக்கே – சம்பவம் கன்பார்ம்…!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் ‘லியோ’ படம் வெளியானது. இப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து ‘தளபதி 68’ படத்தில் நடிக்க ஆரம்பித்து விட்டார் விஜய்.

இந்நிலையில் ‘லியோ’ ரிலீசான நாளில் இருந்த ‘தளபதி 68’ படம் குறித்த அப்டேட்கள் சோஷியல் மீடியாவை ஆக்கிரமிக்க ஆரம்பித்தன. அஜித்தை ‘மங்காத்தா’ படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடிக்க வைத்து அதகளம் செய்திருந்தார் வெங்கட் பிரபு. அஜித்தை தொடர்ந்து தற்போது விஜய்யை அவர் இயக்கவுள்ளது கோலிவுட் வட்டாரத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது.

அண்மையில் இப்படத்தின் ஷுட்டிங் பூஜையுடன் துவங்கியது. முதல் அப்டேட்டாக இந்த பூஜை வீடியோவை வெளியிட்டனர் படக்குழுவினர். அந்த வீடியோயில் ஜெயராம், மைக் மோகன், பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல், விடிவி கணேஷ், யோகி பாபு, பிரேம்ஜி அமரன், வைபவ் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர். மற்றும் நாயகிகளான சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி ஆகியோரும் இந்த பூஜையில் கலந்துக்கொண்டனர்.

இந்நிலையில் அண்மையில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவிடம் ‘தளபதி 68’ படத்தில் மங்காத்தா பின்னணி இசை போல் எதிர்பார்க்கலாமா என கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர் நிச்சயமாக அப்படி ஒன்றை ‘தளபதி 68’ படத்தில் எதிர்பார்க்கலாம் என தெரிவித்துள்ளார்.

‘மங்காத்தா’ படத்தின் பின்னணி இசை இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் படத்திற்கு யுவன் இசையமைக்கவுள்ளது ரசிகர்கள் மத்தியில் உச்சக்கட்ட எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது. ‘தளபதி 68’ படத்தில் விஜய் அப்பா, மகனாக இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதன் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related News

காதலியுடன் காளிதாஸ் ஜெயராமுக்கு பிரம்மாண்டமாக நடந்த நிச்சயதார்த்தம் – மணப்பெண் யார் தெரியுமா?

தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் பரிட்சயமான ஒரு நடிகர் தான் ஜெயராம். 90களில் பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். கடைசியாக மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ஆழ்வார்க்கடியான் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவருடைய மகன் காளிதாஸும் ஹீரோவாக நடித்து வருகிறார். காளிதாஸ்…

Read More
பிக் பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறப்போவது இவர்தான் – உறுதியான தகவல்..!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது. என்னதான் இந்நிகழ்ச்சி ஒருபக்கம் சர்ச்சைகளை கிளம்பினாலும் மறுபக்கம் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லாமல் நடந்து கொண்டிருக்கின்றது. கடந்த வாரம் யாரும் எதிர்பார்க்காத வகையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து பிரதீப் ஆண்டனி வெளியேற்றப்பட்டார். சக…

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

பொதுத் தேர்தலை முன்னிட்டு 63,145 பொலிஸ் அதிகாரிகள் கடமையில் – பிரதி பொலிஸ் மா அதிபர்

பொதுத் தேர்தலை முன்னிட்டு 63,145 பொலிஸ் அதிகாரிகள் கடமையில் – பிரதி பொலிஸ் மா அதிபர்

மீன்பிடி படகொன்று கவிழ்ந்து விழுந்ததில், தென் கொரியாவில் இருவர் பலி!

மீன்பிடி படகொன்று கவிழ்ந்து விழுந்ததில், தென் கொரியாவில் இருவர் பலி!

சூழல் மாசு காரணமாக கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு !

சூழல் மாசு காரணமாக கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு !

பாடசாலை மாணவர்களுக்கான புதிய நிவாரணம் !

பாடசாலை மாணவர்களுக்கான புதிய நிவாரணம் !

இணையவழி ஊடாக நடைபெறும் மோசடி !

இணையவழி ஊடாக நடைபெறும் மோசடி !

இன்றைய வானிலை!

இன்றைய வானிலை!