நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மின்சார விநியோக தடை ஏற்படுமாயின் உடனடியாக தமக்கு அறிவிக்குமாறு இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
மின்சார விநியோக தடை ஏற்படும் நிலையில், அது தொடர்பாக அறிவிக்கும் முறைமையும் இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
இதனடிப்படையில், CEBcare எனும் செயலி ஊடாக அல்லது இலங்கை மின்சார சபையின் உத்தியோகபூர்வ இணையதளத்திற்கு பிரவேசிப்பதன் மூலம் அல்லது 1987 எனும் இலக்கத்திற்கு குறும்செய்தி அனுப்புவதன் மூலம் அறிவிக்கமுடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் வாரத்திற்கு ஏழு நாட்களும் 24 மணிநேரமும் சேவையை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.