நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
24 மாவட்டங்களில் 141 ,268 குடும்பங்களை சேர்ந்த 475 ,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அதேநேரம் 101 வீடுகள் முழுமையாக சேதமடைந்து உள்ளதுடன் 2 ,591 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
9 ,934 குடும்பங்களை சேர்ந்த 31 ,361 பேர் தங்களது இருப்பிடங்களிலிருந்து இடம்பெயர்ந்துள்ளதுடன் அவர்கள் தற்காலிகமாக முகாம்களில் தொடர்ந்தும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.