சக்தி வாய்ந்த ஏவுகணைகளை யுக்ரைனுக்கு எதிராக பயன்படுத்துவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் அந்த நாட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
யுக்ரைனுக்கு எதிரான இந்த போர் மேலும் தீவிரமடையும், அமெரிக்கா மற்றும் பிரித்தானிய ஆகிய நாடுகளின் ஏவுகணைகளை யுக்ரைன் பயன்படுத்த தொடங்கியுள்ளது. அதற்கு பதிலளிக்கும் வகையில் சக்தி வாய்ந்த ஏவுகணைகளை பயன்படுத்தவுள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் தெரிவித்துள்ளார்.
அதே நேரம் உலக நாடுகள் தலைவர்கள் இதற்கு கடுமையான பதிலை வழங்க வேண்டும் என யுக்ரைன் ஜனாதிபதி வொலோடிமீர் ஷெலென்ஸ்கி கோரிக்கைவிடுத்துள்ளார்.