கொழும்பு நுகர்வோர் விலை சுட்டெண் அடிபடையிலான பணவீக்கம் கடந்த ஒக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இம் மாதத்தில் வீழ்ச்சியை பதிவுசெய்துள்ளது.
தொகை மதிப்பு மற்றும் புள்ளி விபரத் திணைக்களம் இன்று வெளியிட்ட புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய கடந்த ஒக்டோபர் மாதத்தில் மறை 0 .8 வீதமாக இருந்த கொழும்பு நுகர்வோர் விலை சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம் நவம்பர் மாதத்தில் மறை 2 .1 சதவீதமாக வீழ்ச்சியை பதிவுசெய்துள்ளது.
அதே நேரம் கடந்த ஒக்டோபர் மாதம் 1 வீதமாக இருந்து உணவு பணவீக்கம் இந்த மாதம் சிறியளவு வீழ்ச்சியடைந்து 0 .6 சதவீதமாக பதிவாகியுள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளி விபர திணைக்களம் அறிவித்துள்ளது.