வங்காள விரிகுடாவில் தென்மேற்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று தாழமுக்கமாக வலுவடைய கூடும் என சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கமானது இலங்கையின் கிழக்கு கரையை கடந்து வடமாகாணத்தை ஊடறுத்து தமிழகத்தை நோக்கி நகர்கின்றது. இதன் காரணமாக கிழக்கு மாகாணத்தில் சில இடங்களில் 150
மில்லிமீற்றர் வரையான பலத்த மழை பெய்யக்கூடும்.
மேலும் வடக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் 100 மில்லிமீற்றர் வரை மழை பதிவாகக்கூடும்.
இதேவேளை கடல் பிராந்தியங்கள் சற்று கொந்தளிப்பாக காணப்படுவதால் மறு அறிவித்தல் வரை மன்னார் முதல் காங்கேசன்துறை திருகோணானமலை மட்டக்களப்பு மற்றும் பொத்துவில் ஊடாக அம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களுக்கு செல்ல வேண்டாம் என கடல்தொழிலாளர்களுக்கு ஏச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் 35 -45 கிலோமீற்றர் வரையான பலத்த காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது பலத்த காற்று வீசும் மற்றும் மின்னல் தாக்கம் ஏற்றப்படுவதனால் பொது மக்கள் அவதானமாக செயற்படுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.