இன்றைய வானிலை அறிக்கை!

வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் உருவாகிய சக்தி மிக்க தாழ் அமுக்கமானது திருகோணமலையிலிருந்து வடகிழக்குத் திசையில் சுமார் 100 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொன்டு இருப்பதாகவும் இன்று அதிகாலை 2.30 மணியளவில் அவதானிக்கபட்டது என சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

இந்த தாழமுக்கமானது, மெதுவாக நகர்ந்து செல்கின்றது. மேலும் தீவிரமடைவதுடன் இன்று சூறாவளியாக வலுவடைந்து இலங்கையின் கிழக்குக் கரையை அண்மித்து வடக்கு – வடமேற்குத் திசையை நோக்கி நகர்ந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது இதன் தாக்கத்தின் காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் முகில் சூழ்ந்து காணப்படும்.

மேலும் வட மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்திலும் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். இப் பிராந்தியங்களின் சில இடங்களில் 150 மில்லிமீற்றரிலும் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும்.

வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் மாத்தளை மற்றும் கேகாலை மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றரிலும் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.

வடக்கு,வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு 60 – 70 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி மிகப் பலத்த காற்று வீசக்கூடும். நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மணித்தியாலத்திற்கு 40 – 50 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக்கூடும்.

வங்காள விரிகுடாவில் சக்தி மிக்க தாழ் அமுக்கம் சூறாவளியாக வலுவடைய இருப்பதனால் நாட்டை சூழ உள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பிராந்தியங்களுக்கு மறு அறிவித்தல் வரையில் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகின்றனர்.

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 – 50 கிலோமீற்றர் வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து காற்று வீசும். இந்த காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 60 – 70 கிலோமீற்றராக அதிகரித்ததும் காணப்படும்.

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

மட்டக்களப்பு தொடக்கம் திருகோணமலை ஊடாக காங்கேசன்துறை வரையான கடல் பிராந்தியங்களில் கடல் அலையானது 2.5 – 3.0 மீற்றர் உயரத்திற்கு மேலெழக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இது கரையை தொடக்கூடும் ஆனால் தரைப் பிரதேசத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்தாது.

பலத்த காற்று, மின்னல் தாக்கங்கள் மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட்டு இழப்புகளை அல்லது சேதங்களை தவிர்த்துக் கொள்ளுமாறும் அவர் கூறியுள்ளார்.

  • Related News

    77ஆவது சுதந்திர தின நிகழ்வில் பொது மக்கள் பங்கேற்க முடியும்!

    எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி நடைபெறவுள்ள நாட்டின் 77ஆவது சுதந்திர தின நிகழ்வில் பொது மக்கள் பங்கேற்க முடியும் பொது நிர்வாக அமைச்சர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன தெரிவித்துள்ளார். மேலும், சுதந்திர தின நிகழ்வுகளுக்காக 80 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டள்ளது.…

    Read More
    வாகன இறக்குமதிக்கான அனுமதி இன்று முதல் வழங்கப்பட்டுள்ளது.

    வாகன இறக்குமதிக்கான அனுமதி இன்று(28.01) முதல் வழங்கப்பட்டுள்ளது. நிதியமைச்சராக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இதற்கான விசேட வர்த்தமானி அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார்.   இந்த அறிவிப்பின் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த வாகன இறக்குமதியை மீள ஆரம்பிக்கலாம். பெப்ரவரி மாதம் முதல் இறக்குமதி அனுமதி…

    Read More

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Read More

    77ஆவது சுதந்திர தின நிகழ்வில் பொது மக்கள் பங்கேற்க முடியும்!

    77ஆவது சுதந்திர தின நிகழ்வில் பொது மக்கள் பங்கேற்க முடியும்!

    ‘ ஜன நாயகன்’

    ‘ ஜன நாயகன்’

    அறிமுக விருதுகள்!

    அறிமுக விருதுகள்!

    வாகன இறக்குமதிக்கான அனுமதி இன்று முதல் வழங்கப்பட்டுள்ளது.

    வாகன இறக்குமதிக்கான அனுமதி இன்று முதல் வழங்கப்பட்டுள்ளது.

    அரசுக்கு சொந்தமான சொகுசு வாகனங்கள் கண்டுபிடிப்பு!

    அரசுக்கு சொந்தமான சொகுசு வாகனங்கள் கண்டுபிடிப்பு!

    மருந்துகளின் விலையைக் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது!

    மருந்துகளின் விலையைக் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது!