பிஹாரில் மாணவர்கள் போராட்டத்தில் தடியடி – ராகுல், பிரியங்கா கண்டனம்!

வினாத்தாள் கசிவு விவகாரத்தில் பிஹார் அரசு பணியாளர் தேர்வாணையகத்துக்கு எதிராக போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது பொலிசார் தடியடி நடத்தியதற்கு எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர்.

இதுகுறித்து ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் பதிவில், “ஏகலைவனின் கட்டைவிரல் துண்டிக்கப்பட்டதைப் போலவே வினாத்தாள் கசிவுகளால் வேலைவாய்பை தேடும் இளைஞர்களின் கட்டைவிரல்கள் வெட்டப்படுகின்றன என்று நாடாளுமன்றத்தில் நான் ஏற்கெனவே பேசியிருந்தேன். இதற்கு சமீபத்திய சிறந்த உதாரணம் பிஹார் அரசு பணியாளர் தேர்வாணையகத்துக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டம்.

வினாத்தாள் கசிவுக்கு எதிராகவும், தேர்வை ரத்து செய்ய கோரியும் மாணவர்கள் குரல் எழுப்புகின்றனர். ஆனால், தோல்வியை மூடிமறைக்க தேசிய ஜனநாயக கூட்டணி மாணவர்கள் மீது தடியடி நடத்துகிறது.

இது மிகவும் வெட்கக்கேடான செயல் மட்டுமின்றி வன்மையாக கண்டிக்கத்தக்கது. மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடுவதை பொறுத்துக் கொள்ள முடியாது. நாங்கள் அவர்களுடன் இருக்கிறோம். நீதி கிடைக்க போராடுவோம்” என்று தெரிவித்துள்ளார். இதேபோன்று, காங்கிரஸ் கட்சி எம்பி பிரியங்கா காந்தி வதேராவும் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

Related News

இந்தியாவில் கால்வாய் ஒன்றில் பஸ் விழுந்து விபத்துக்குள்ளாகியதில் 8 பேர் பலி!

இந்தியாவின் பஞ்சாபிலுள்ள பதிண்டா நகர் அருகே பஸ் ஒன்று கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், 18 பேர் காயமடைந்துள்ளனர். பஞ்சாபின் சர்துல்கர் என்ற இடத்தில் இருந்து பதிண்டா மாநகர் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பஸ் ஜிவான் சிங்…

Read More
மன்மோகன் சிங் உடலுக்கு இந்திய பிரதமர் மோடி அஞ்சலி!

மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட பல தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங்கிற்கு நேற்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் டில்லி…

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

துளி கூட மேக்கப் போடாமல் நடிகை மிருணாள் தாகூர் எப்படி இருக்கிறார்!

துளி கூட மேக்கப் போடாமல் நடிகை மிருணாள் தாகூர் எப்படி இருக்கிறார்!

மட்டக்குளியில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

மட்டக்குளியில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

இந்தியாவில் கால்வாய் ஒன்றில் பஸ் விழுந்து விபத்துக்குள்ளாகியதில் 8 பேர் பலி!

இந்தியாவில் கால்வாய் ஒன்றில் பஸ் விழுந்து விபத்துக்குள்ளாகியதில் 8 பேர் பலி!

தென்னாபிரிக்கா மற்றும் பாகிஸ்தானிய அணிகளுக்கு இடையிலான மூன்றாம் நாள் ஆட்டம்!

தென்னாபிரிக்கா மற்றும் பாகிஸ்தானிய அணிகளுக்கு இடையிலான மூன்றாம் நாள் ஆட்டம்!

இலஞ்சம் வழங்கிய வர்த்தகர்கள் கைது!

இலஞ்சம் வழங்கிய வர்த்தகர்கள் கைது!

இன்றைய வானிலை அறிக்கை!

இன்றைய வானிலை அறிக்கை!