சிரிய ஜனாதிபதி ரஷ்யாவில் தஞ்சம்!

கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் இருந்து தன்னை காப்பாற்றி கொள்ள, தப்பியோடிய சிரிய ஜனாதிபதி பஷர் அல் அஸாத் (Bashar al-Assad ) மாஸ்கோ வந்தடைந்ததாக ரஷ்ய அரச ஊடகம் தெரிவித்துள்ளது.

மனிதாபிமான காரணங்களுக்காக ரஷ்யா அவர்களுக்கு புகலிடம் அளித்துள்ளது என கிரெம்ளின் மாளிகை தெரிவித்துள்ளது.

கடந்த, 2011ல் அரசுக்கு எதிராக தொடங்கிய போராட்டம், உள்நாட்டு போராக வெடித்தது.

அரசுக்கு எதிராக பல அமைப்புகள் இணைந்தன.
இந்நிலையில், அல் – குவைதா அமைப்பின் ஒரு பகுதியான, எச்.டி.எஸ்., எனப்படும் ஹயாத் தாஹ்ரிர் அல்ஷாம் என்ற அமைப்பு தலைமையிலான அரசுக்கு எதிரான ஆயுதம் ஏந்திய கிளர்ச்சிப் படைகள், கடந்த மாதம்  27ஆம் திகதி தீவிர தாக்குதலை தொடங்கின.

அலெப்போ நகரைக் கைப்பற்றிய கிளர்ச்சிப் படைகள், நாட்டின் மூன்றாவது பெரிய நகரமான ஹாம்ஸ் நகரையும் சுற்றி வளைத்தன.

இதைத் தொடர்ந்து, டாரா, குனேத்ரா, சுவேடா ஆகிய நகரங்களையும் கைப்பற்றின.

எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸை, கிளர்ச்சி படைகள் நேற்று கைப்பற்றின.

தலைநகரை கிளர்ச்சிப்படைகள் நெருங்கியதை அறிந்த ஜனாதிபதி அஸாத், விமானம் மூலம் தப்பிச் சென்றார்.

இதையடுத்து, நாட்டின் நிர்வாகம் தங்களுடைய கட்டுப்பாட்டுகள் வந்துள்ளதாக கிளர்ச்சிப் படைகள் தெரிவித்தன.

ஆனால் அஸாத் எந்த நாட்டுக்குச் சென்றார் என்ற தகவல் வெளியாகாமல் மர்மமாக இருந்தது.
இந்நிலையில், ரஷ்யாவின் கிரெம்ளின் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், சிரியாவில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அங்கிருந்து தப்பியோடிய அஸாத் மற்றும் அவரது குடும்பத்தினர் ரஷ்யா, மொஸ்கோவில் தஞ்சம் புகுந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

சிரியாவில் ஐஎஸ் அமைப்பு தொடர்பாக அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் கருத்து!

சிரியாவில் ஐஎஸ் அமைப்பு மீண்டும் தலைதூக்க முயலும் எனவும் அவ்வாறு நடைபெறுவதற்கு அமெரிக்கா அனுமதி வழங்காது எனவும் அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கென் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், சிரிய மக்களே தங்கள் எதிர்காலத்தை தெரிவுசெய்யவேண்டும். அமைதியான ஆட்சியொன்றை உருவாக்குவது…

Read More
இலங்கையின் இரண்டு முன்னாள் அதிகாரிகளுக்கு தடை விதித்த அமெரிக்கா!

கணிசமான ஊழலில் ஈடுபட்டமைக்காக இலங்கையின் இரண்டு முன்னாள் அதிகாரிகள் மீது அமெரிக்கா தடைகளையும் விசா கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. இதன்படி, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரியான கபில சந்திரசேன, அதிக விலைக்கு எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்வதை உறுதிப்படுத்த…

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

களுத்துறையில் வீடொன்றில் தீ விபத்து!

களுத்துறையில் வீடொன்றில்  தீ விபத்து!

மின்சாரத்தை 4 முதல் 5 மணி நேரம் வரை துண்டிக்க நேரிடும் அபாயம்!

மின்சாரத்தை 4 முதல் 5 மணி நேரம் வரை துண்டிக்க நேரிடும் அபாயம்!

யாழில் பரவி வரும் காய்ச்சலால் மேலும் ஒருவர் உயிரிழப்பு!

யாழில் பரவி வரும் காய்ச்சலால் மேலும் ஒருவர் உயிரிழப்பு!

சிரியாவில் ஐஎஸ் அமைப்பு தொடர்பாக அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் கருத்து!

சிரியாவில் ஐஎஸ் அமைப்பு தொடர்பாக அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் கருத்து!

நடிகர் துல்கர் சல்மான் வெளியிட்ட சமுத்திரக்கனியின் ‘திரு. மாணிக்கம்’ பட முன்னோட்டம்

நடிகர் துல்கர் சல்மான் வெளியிட்ட சமுத்திரக்கனியின் ‘திரு. மாணிக்கம்’ பட முன்னோட்டம்

ஆசிய சதுரங்க இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ள யாழ் மாணவி!

ஆசிய சதுரங்க இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ள யாழ் மாணவி!