பெலாரஸ் நாட்டில் பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவரும் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரருமான ’லொக்கு பெடி’ என்று அழைக்கப்படும் சுஜீவ ருவன் குமார என்பவர் அந்நாட்டு பொலிஸாரால் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்கள் போலியானது என பொலிஸ் ஊடக பேச்சாளர் கே.பி.மனதுங்க கந்தளாய் பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்
மேலும் பெலாரஸ் நாட்டில் கைது செய்யப்பட்டு அந்நாட்டு பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள லொக்கு பெடி என்று அழைக்கப்படும் சுஜீவ ருவன் குமார என்பவர் அந்நாட்டு பொலிஸாரால் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.
பின்னர், குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் இது தொடர்பில் பெலாரஸ் பொலிஸாரிடம் கலந்துரையாடியதையடுத்து, லொக்கு பெடி அந்நாட்டு பொலிஸாரால் விடுதலை செய்யப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது